உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / லாரி கூரை மீது அமர்ந்து சென்றவர் மின்சாரம் பாய்ந்து பலி

லாரி கூரை மீது அமர்ந்து சென்றவர் மின்சாரம் பாய்ந்து பலி

வேலுார்: லாரியின் கூரை மீது அமர்ந்திருந்த தொழிலாளி, மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த மேல் அரசம்பட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 36; கூலி தொழிலாளி. இவர், 6ம் தேதி மாலை, லாரியில் ரோலரை ஏற்றிக்கொண்டு கீழநாகநேரி பகுதிக்கு செல்வதற்காக லாரியின் கூரை மீது உட்கார்ந்து பயணம் செய்தார். லாரியை டிரைவர் முத்துக்குமார் ஓட்டினார். தெள்ளை கிராமம் வழியாக சென்ற போது, மின்சார கம்பி ரோலர் மீது உரசியது. இதனால் லாரியின் மேல் இருந்த மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அவரை பரிசோதித்த வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். லாரி டிரைவர் முத்துக்குமார் மீது வேலுார் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ