மேலும் செய்திகள்
குளவி கொட்டியதில் முதியவர் மரணம்
27-Sep-2025
வேலுார் : காட்பாடி அருகே குளவி கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தார். வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் பாக்கியம்மாள், 70. இவர் சேனுாரிலிருந்து ஜாப்ராபேட்டைக்கு, நேற்று முன்தினம் மாலை நடந்து சென்றார். அப்போது மழை பெய்ததால், ஜாப்ராப்பேட்டை சர்ச் அருகே மரத்தடியில் ஒதுங்கினார். அப்போது அங்கு கூடு கட்டி இருந்த குளவிகள், பாக்கியம்மாளை கடித்ததாக கூறப்படுகிறது. அதில் காயம் அடைந்தவர், மயங்கி விழுந்தார். பிரம்மபுரம் போலீசார், பாக்கியம்மாளை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Sep-2025