உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / குட்கா பதுக்கிய முதியவர் கைது

குட்கா பதுக்கிய முதியவர் கைது

குடியாத்தம்: குடியாத்தத்தில், 36 கிலோ குட்கா பதுக்கிய மளிகை கடைக்காரர் வெங்கடேசன், 73, கைது செய்யப்பட்டார். வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, சீவூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். மளிகை கடைக்காரர். இவர் ஹான்ஸ், குட்கா போதை பொருட்களை கடையில் பதுக்கி, சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. குடியாத்தம் டவுன் போலீசார், வெங்கடேசன் மளிகை கடையில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 36 கிலோ ஹான்ஸ், குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்து, வெங்கடேசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !