உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  அரசு பஸ் மோதி விபத்து கர்ப்பிணி, சிசு உயிரிழப்பு

 அரசு பஸ் மோதி விபத்து கர்ப்பிணி, சிசு உயிரிழப்பு

கணியம்பாடி: மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் காங்கோஜி. இவர், வேலுார் அடுத்த கணியம்பாடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவரது மனைவி சுமித்ரா, 23. இவர்களுக்கு மோனாஸ்ரீ, 4, என்ற பெண் குழந்தை உள்ளது. காங்கோஜி, குடும்பத்துடன் வேலுார் மாவட்டம், வேப்பம்பட்டில் வசித்தார். சுமித்ரா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக சென்றார். காங்கோஜி அண்ணன் மகன் ரிஷி, 22, டூ -வீலரில் சுமித்ராவை அழைத்து சென்றார். இவர்களுடன், மோனாஸ்ரீ, காங்கோஜியின் அண்ணன் மகள் மோனிகா, 14, ஆகியோரும் சென்றனர். வேலுாரில் இருந்து ஆரணி செல்லும் சாலையில், கணியம்பாடி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, திருவண்ணாமலையில் இருந்து வேலுார் நோக்கி வந்த அரசு பஸ், டூ - வீலரின் பின்பக்கம் மோதியது. இதில், சுமித்ரா, அவரது வயிற்றில் இருந்த சிசுவுடன் உயிரிழந்தார். இரு சிறுமியர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். வேலுார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி