உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / காதல் கணவருடன் மாணவி ரயிலில் விழுந்து தற்கொலை

காதல் கணவருடன் மாணவி ரயிலில் விழுந்து தற்கொலை

வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி அரும்பாக்கத்தை சேர்ந்தவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி மணிகண்டன், 27. இவரது மனைவி நிஜிதா, 24. கருத்து வேறுபாடால் தம்பதி பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில், கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பொறியியல் முதலாமாண்டு மாணவி கோகிலா, 19, என்பவருக்கும், மணிகண்டனுக்கும், 'இன்ஸ்டா' வாயிலாக பழக்கமாகி காதலித்தனர். இருவரும் இரு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். மாணவி வீட்டார் புகாரின்படி, நெல்லிக்குப்பம் போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்தனர். இருவரும் நேற்று காலை நெல்லிக்குப்பம் லத்தேரி அடுத்த பட்டியூர் ரயில் தண்டவாளத்தில், கட்டியணைத்த படி, படுத்து கொண்டனர்.அந்த வழியாக வந்த ரயில், அவர்கள் மீது ஏறி, இறங்கியதில், இருவரும் பலியாகினர். சடலங்களை மீட்டு, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை