உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / விஷ பூச்சி கடித்ததில் மாணவர் உயிரிழப்பு

விஷ பூச்சி கடித்ததில் மாணவர் உயிரிழப்பு

வேலுார்:வேலுார், விருப்பாட்சிபுரம், காந்தி நகரை சேர்ந்தவர் சஞ்சய், 13. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர், விருப்பாட்சிபுரத்திலுள்ள அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அருகம்புல் பறிக்க நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு விருப்பாட்சிபுரம் பூந்தோட்டம் பகுதிக்கு சென்றார். அப்போது புதரிலிருந்த விஷ பூச்சி அவரை கடித்தது. இது குறித்து தன் தந்தைக்கு, 'வீடியோ கால்' செய்த சஞ்சய், சைகை மூலம் பூச்சி கடித்ததை தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர், மகனை மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நேற்று காலை மாணவன் சஞ்சய் உயிரிழந்தார். பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை