ரயில் குடிநீரில் ஆல்கஹால் நெடி
வேலுார்:சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையிலிருந்து, பெங்களூருவுக்கு ஒரு பயணி பயணம் செய்தார். ரயிலில் குளிர்சாதன பெட்டியில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிக்கு, பெட்ஷிட், தலையணை மற்றும் குடிநீர் பாட்டில் ரயில்வே நிர்வாகத்தால் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, அந்த பயணிக்கு, வேலுார் மாவட்டம், காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் தாண்டியவுடன், ரயில்வே நிர்வாகம் இலவசமாக குடிநீர் பாட்டில் வழங்கியது. அதில், ஆல்கஹால் நெடி வீசியதால், அதிர்ச்சியடைந்த அவர், தண்ணீர் பாட்டிலுடன் வீடியோ எடுத்து, அதை வலைதளங்களில் பரப்பினார். இதனால், ரயில்வே நிர்வாகம் வழங்கிய குடிநீர் பாட்டிலில், எப்படி ஆல்கஹால் வந்தது என, பயணியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.