உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / அழுகிய நிலையில் இருவர் உடல் மீட்பு

அழுகிய நிலையில் இருவர் உடல் மீட்பு

வேலுார்,:வேலுார் மாவட்டம், காமராஜர் நகர் விரிவை சேர்ந்தவர் சேரன் செங்குட்டுவன், 51; தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் உள்ளனர். இவர், குடும்பத்தை பிரிந்து ஒரு மாதத்திற்கு முன், தன் அண்ணன் வீட்டில் வசித்தார். இந்நிலையில், இவர் வீட்டில் துர்நாற்றம் வீசியது. பாகாயம் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று அழுகிய நிலையில் இறந்து கிடந்த சேரன் செங்குட்டுவன் உடலை மீட்டனர். அதே போல, வேலுார் மா வட்டம், நஞ்சுக்கொண்டாபுரம், கொல்லை மேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், 90, செப்., 10ல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம், கத்தாலம் பட்டு அருகே சிங்கிரி கோவில் மலைப்பகுதியில் ஆறுமுகம் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. வேலுார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை