உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டுனர் உரிமம் வழங்கும் விழா

ஓட்டுனர் உரிமம் வழங்கும் விழா

திண்டிவனம் : இலவச ஓட்டுனர் பயிற்சி முடித்தவர்களுக்கு திண்டிவனம் சேர்மன் பூபாலன் டிரைவிங் லைசென்சை வழங்கினார். திண்டிவனம் நகராட்சி மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முப்பது பேருக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு 6 மாதம் திருவண்ணாமலை அருணை ஐ.டி.ஐ., நிறுவனத்தினர் பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்ற முப்பது பேருக்கும் மானியமாக தலா 2 ஆயிரத்து நூறு ரூபாய் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முடித்த 30 பேருக்கும் டிரைவிங் லைசென்சை சேர்மன் பூபாலன் வழங்கினார். நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்திரன், மேலாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் அப்பாஸ் மந்திரி, ராஜசக்தி, சவுந்தர், ஜெயராஜ், முரளிதாஸ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ