உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்

செஞ்சி: செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். நகர அவைத்தலைவர் பார்சுதுரை, துணை சேர்மேன் ராஜட்சுமி ராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான் பேச்சாளர்கள் ஈரோடு இறைவன், ஆலந்தூர் மலர்மன்னன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட அவைத்தலைவர் சேகர், தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய சேர்மேன்கள் அமுதா ரவிக்குமார், சொக்கலிங்கம், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, மாவட்ட விவசாய அணி தலைவர் கணேசன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திலகவதி, ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், நாராயணமூர்த்தி, சாந்தி சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ