உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வழிப்பறிக்கு சதி திட்டம் தீட்டிய 2 வாலிபர்கள் கைது

வழிப்பறிக்கு சதி திட்டம் தீட்டிய 2 வாலிபர்கள் கைது

மரக்காணம்:மரக்காணத்தில் வழிப்பறியில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி 5 பேர் நின்றிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார், அவர்களை பிடிக்க முயன்ற போது 2 பேர் மட்டும் சிக்கினர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் மதிவாணன் மகன் மதன்குமார், 24; வழுதாவூர் மூர்த்தி மகன் முகிலன், 25; என்பதும் இவர்களுடன் வல்லரசு, 23; கவுதமன், 24; சரவணன், 23; ஆகியோர் இருந்ததாகவும், மரக்காணம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, மதன்குமார், முகிலனை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கத்தி, இரும்பு பைப், பல்சர் பைக்கை பறிமுதல் செய்து, தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை