மேலும் செய்திகள்
வெடி பொருட்கள் கடத்தியவர் கைது
25-Aug-2024
விக்கிரவாண்டி: புதுச்சேரியிலிருந்து பைக்,பஸ்ஸில் கடத்தி வரப்பட்ட 255 மது பாட்டில்களை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சோதனை சாவடியில் விழுப்புரம் மாவட்ட கலால் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் 200 பிராந்தி பாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. மேலும் அந்த வழியாக வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்த போது கட்டை பையில் 55 மது பாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது.போலீசார் விசாரணையில் பைக்கில் வந்தது விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் எனவும், பஸ்சில் வந்தவர் அனந்தபுரத்தைச் சேர்ந்த கலையரசன், 34; எனவும் தெரிந்தது. இருவரிடமிருந்து போலீசார் 255 மது பாட்டில்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
25-Aug-2024