உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி சிறுவன் பலி விக்கிரவாண்டி அருகே பரிதாபம் 

கார் மோதி சிறுவன் பலி விக்கிரவாண்டி அருகே பரிதாபம் 

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் இறந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.விக்கிரவாண்டி அடுத்த அசோகபுரியைச் சேர்ந்தவர் கலையரசன் மகன் புவியரசன், 10; இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5வது படித்து வந்தார். நேற்று காலை 6.30 மணிக்கு புவியரசன் தனது உறவினர் செல்வி, 39: என்பவருடன் கடை வீதிக்குச் சென்று, வீடு திரும்ப சாலையோரம் நடந்து வந்தனர்.அப்போது விழுப்புரத்திலிருந்து செஞ்சி நோக்கிச் சென்ற ஸ்விப்ட் டிசயர் கார் புவியரசன், செல்வி ஆகியோர் மீது மோதியது.விபத்தில் சம்பவ இடத்திலேயே புவியரசன் இறந்தார். செல்வி படுகாயமடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.கலையரசன் கொடுத்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவர் காரைக்கால், திருநள்ளாரைச் சேர்ந்த அகஸ்டின் பால், 33; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை