உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் இரங்கல் கூட்டம்

விழுப்புரத்தில் இரங்கல் கூட்டம்

விழுப்புரம், மறைந்த மா.கம்யூ., பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு, விழுப்புரத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில், சீதாராம் யெச்சூரியின் புகைப்படத்துக்கு பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்துக்கு மா.கம்யூ., மாவட்டச் செயலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தி.மு.க.,சார்பில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலர் இளந்திரையன், நகர செயலர் சக்கரை, மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, இந்திய கம்யூ., மாவட்ட செயலர் சவுரிராஜன், முன்னாள் மாவட்ட செயலர் சரவணன், வி.சி.க., மாவட்ட செயலர் பெரியார், பி.எஸ்.பி., நிர்வாகி கலியமூர்த்தி, பா.ம.க., நிர்வாகி தங்கஜோதி உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !