உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின் கம்பத்தில் தனியார் பஸ் மோதல் கண்டமங்கலம் அருகே பரபரப்பு

மின் கம்பத்தில் தனியார் பஸ் மோதல் கண்டமங்கலம் அருகே பரபரப்பு

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே ஆபத்தான வளைவில் தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது. பயணிகள் 50 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணி காரணமாக, புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, கடந்த 7 மாதங்களாக மாற்றப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் 50 பயணிகளுடன், மதகடிப்பட்டு, பி.எஸ். பாளையம் வழியே புதுச்சேரி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. காலை 8:40 மணிக்கு, எஸ்.ஆண்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள நிதியுதவி தொடக்கப் பள்ளி அருகே ஆபத்தான வளைவில் சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த தனியார் கல்லுாரி பஸ் மீது மோதாமல் இருக்க, தனியார் பஸ் டிரைவர் , பஸ்சை இடதுபக்கம் திருப்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த சிமென்ட் மின்கம்பத்தில் மோதியது. அதில், மின் கம்பம் இரண்டாக முறிந்து மின் கம்பிகளுடன் பஸ் மீது விழுந்தது. அதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பஸ்சின் இடதுபுறம் சேதமடைந்தது. இருப்பினும், பயணிகள் அதிஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.மின்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, உடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய கம்பத்தை நட்டு மின் வினியோகத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை