| ADDED : ஜூலை 22, 2024 01:32 AM
வானுார் : வானுார் அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நிற்கும் பயணிகளை ஏற்றாமல், சென்ற தனியார் பஸ்சை பொது மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக புதுச்சேரியில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகிறது.சாலையின் இடைப்பட்ட பகுதியில் புளிச்சப்பள்ளம், தென்கோடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லாமல், மேம்பாலத்தின் மேல் பகுதியிலேயே செல்வதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடந்த இரு தினங்களுக்கு முன், புளிச்சப்பள்ளத்தில், மேம்பாலத்தின் கீழ் நின்ற பயணிகளை ஏற்றாமல் சென்ற 3 தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அவர்களிடம் வானூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.ஆனால், நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சென்ற தனியார் பஸ் ஆண்டியார்பாளையம் பகுதியில் நிற்காமல் சென்றது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், திண்டிவனத்தில் இருந்து மீண்டும் புதுச்சேரிக்கு திரும்பிய அந்த பஸ்சை நேற்று மாலை 5:00 மணிக்கு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தி, ஆர்.டி.ஓ., அதிகாரியிடம் புகார் தெரிவிக்கும்படி பஸ்சை விடுவித்தனர். இனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.