உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆவின் இயக்குனர் ஆய்வு

ஆவின் இயக்குனர் ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 10ஆயிரம் லிட்டர் கொள்ளவுடைய பால் குளிரூட்டும் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று சென்னை ஆவின் இயக்குனர் அண்ணாதுரை மையத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தும், சங்க செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.பின், பணியாளர்களின் கோரிக்கையான நீண்ட கால ஊதிய உயர்வு பிரச்னையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.விழுப்புரம் ஆவின் பொதுமேலாளர் ராஜேஷ், துணை மேலாளர் ராஜ்குமார், பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநில துணைத்தலைவர் அரிகரன், சங்க செயலாளர் ராணி பச்சைக்கிளி, காசாளர் பத்மாவதி, விரிவாக்க அலுவலர் மகேஸ்வரி மற்றும் சங்க பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி