உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற நடவடிக்கை தேவை

விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற நடவடிக்கை தேவை

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பழைய குடிநீர் டேங்க் அருகே பழமையான இரண்டு அரச மரங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, அதில் ஒரு மரம் ஒடிந்து விழுந்தது. இந்த மரம், அருகே இரும்பு ஷீட்டால் அமைக்கப்பட்ட நகராட்சி சுகாதார பிரிவு அலுவலகத்தின் மீது விழுந்து உடைந்தது.அதேபோல், பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் நிற்கும் இடத்திலும் உடைந்து கிடந்தது.இதனால் அந்த பகுதியில், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், மாணவர்கள் அதில் குத்திக்கொள்வதும், அங்கு குப்பை கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் கிடக்கிறது.அந்த மரம் அகற்றப்படாமல் கிடப்பதாக பஸ் நிலைய பயணிகள் புகார் தெரிவித்தனர். ஒரு மரம் ஒடிந்து விழுந்து அகற்றாமல் கிடப்பதோடு, அதேபோல் மற்றொரு மரமும் காய்ந்து பட்டுப்போன நிலையில் விழும் நிலையில் உள்ளதால், அடுத்த மழை காற்றின்போது விழுந்து விபத்து ஏற்படும் முன்பு, அதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ