உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க.,வினர் சுறு சுறு; தி.மு.க., ஐ.டி., அணி உறக்கம்

அ.தி.மு.க.,வினர் சுறு சுறு; தி.மு.க., ஐ.டி., அணி உறக்கம்

ஆளும் தி.மு.க.,வின் செயல்பாடுகள், அமைச்சர்களின் உளறல் பேச்சு, செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து, அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு உடனுக்குடன் சமூக வலைதளத்தில் கார்ட்டூன் போட் டும், தி.மு.க.,வை உசுப்பேத்தும் வகையில் கருத்து களை பதிவிட்டு வருகின்றனர். இதில் ஆளுங்கட்சியின் கோபத்திற்கு ஆளாகிய ஐ.டி., பிரிவு நிர்வாகிகள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பல இடங்களில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.ஆரம்பத்தில் அ.தி.மு.க., ஐ.டி., பிரிவிற்கு தி.மு.க., சார்பிலும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது அ.தி.மு.க., ஐ.டி.,பிரிவு செயல்படுவது போல் தி.மு.க., ஐ.டி.,பிரிவு நிர்வாகிகள் செயல்படுவதில்லை என அக்கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு தினந்தோறும் ஏதாவது ஆளுங்கட்சியை பற்றி அச்சில் ஏறாத வார்த்தை களைக் கொண்டு சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறது. குறிப்பாக அமைச்சர் மீது சேற்றை வாரி வீசினாலும், தி.மு.க., ஐ.டி.,பிரிவு நிர்வாகிகள் பதில் கூறாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்.அ.தி.மு.க.,வில் ஐ.டி., பிரிவு நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தி.மு.க.,வில் உள்ள ஐ.டி., பிரிவிற்கு போதுமான முக்கியத்துவத்தை கட்சியிலும், அமைச்சர் தரப்பிலும் கொடுப்பதில்லை.ஆரம்பத்தில் மாவட்டத்தில் ஆளுங்கட்சி அமைச்சரைப் பற்றி சமூக வலைதளத்தில் விமர்சித்தால், உடனே மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சண்முகத்தை மையப்படுத்தி தி.மு.க., ஐ.டி., பிரிவினர் பதில் கொடுப்பார்கள். இதனால் பல இடங்களில் அ.தி.மு.க., வினர் தி.மு.க., அமைச்சர்களை பற்றி அடக்கி வாசித்தனர். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை.அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு சமீபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அமைச்சர் மஸ்தானை மையப்படுத்தி, சமூக வலைதளத்தில் பதிவிட்டும், இதற்கு பதில் தரும் வகையில் தி.மு.க.,வைச் சேர்ந்த ஐ.டி., பிரிவு நிர்வாகிகள் பதில் தரவில்லை. அந்த அளவிற்கு தி.மு.க.,வின் ஐ.டி.,விங் செயல்பாடுகள் உள்ளது.ஆளுங்கட்சி அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை மட்டும் படம் எடுத்து போடுவதில் காட்டும் அக்கறை, தி.மு.க., அமைச்சரையும், ஆளுங்கட்சி, முதல்வர் உள்ளிட்டவர்களை விமர்சனம் செய்தால், பதில் போடாமல் ஐ.டி.,பிரிவினர் மவுனமாக இருப்பதற்கான காரணம் குறித்து, தி.மு.க., கட்சி தலைமை விசாரணை நடத்த வேண்டும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !