மேலும் செய்திகள்
சடையாண்டிக்குப்பத்தில் கண் பரிசோதனை முகாம்
12-Aug-2024
கண்டமஙகலம் : கண்டமங்கலத்தில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் குறித்த விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு, ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி முருகன் முன்னிலை வகித்தார். கண்டமங்கலம் சுகாதார ஆய்வாளர் சுடர் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் வாசன் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி தலைமையில் டெங்கு மற்றும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்தும், அவற்றை தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.முகாமில், தொற்றுநோய் பரிசோதனை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனை, தொழுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு, டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, சிறுநோய்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.நிகழ்ச்சியில் டாக்டர்கள் கார்த்திகேயன், கவுதம், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் பொன்னுசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில் நிலவேம்பு கஷாயம் மற்றும் உப்புநோய் கரைசல் வழங்கப்பட்டது. பகுதி சுகதார செவிலியர் இந்திரா நன்றி கூறினார்.
12-Aug-2024