மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
4 hour(s) ago
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
4 hour(s) ago
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
4 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி வி.சி., வேட்பாளர் ரவிக்குமார், காணை ஒன்றிய கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.காணை ஒன்றியம், மேல்காரணை, கல்யாணம்பூண்டி, நங்காத்துார், சங்கீதமங்கலம், சாலவனுார், பெருங்கலாம்பூண்டி, அன்னியூர், ஏழுசெம்பொன், சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, செம்மேடு, சிறுவாலை, அதனுார், சூரப்பட்டு, வெங்கந்துார், சாணிமேடு, ஆரியூர், காணை, கருங்காலிப்பட்டு, சிறுவாக்கூர், கல்பட்டு, நத்தமேடு ஆகிய கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக முதல்வர் சொன்னதை செய்பவராக, ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறார். ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில், ஏழை, எளியவர்களிடம் அதிக வரி வசூல் செய்யப்படுகிறது. பா.ஜ., ஆட்சியை மாற்றிவிட்டு, காங்., தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, ஆர்.பி.முருகன், ஆர். முருகன், வி.சி., மாவட்ட செயலாளர் பெரியார், பேச்சாளர் வாஞ்சிநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக நங்காத்துார் புனித பெரியநாயகி அன்னை ஆலைய பாதிரியார் மற்றும் கல்பட்டு புனித வனத்துச் சின்னப்பர் திருத்தல பாதிரியாரை சந்தித்து வேட்பாளர் ரவிக்குமார் ஆசி பெற்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago