கிளியனூர் ஒன்றியத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
வானுார்: கிளியனூர் ஒன்றிய தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா தென்கோடிப்பாக்கம், கொந்தமூர், தேற்குணம், கீழ்கூத்தப்பாக்கம், தைலாபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடந்தது.விழாவிற்கு முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் அய்யப்பன் வரவேற்றார். முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா துவக்கவுரையாற்றினார். விழாவில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் , ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி, கோடைக்காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பேசினார்.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் ராஜி, முரளி, மைதிலி ராஜேந்திரன், கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் ஜெயமூர்தத்தி, கோட்டக்குப்பம் நகர பொருளாளர் தட்சிணாமூர்த்தி, அவைத்தலவர் குப்பன், வானூர் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், ஒன்றிய அவைத்தலைவர் புஷ்பராஜ், எறையூர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மாயக்கிருஷ்ணன், தனபால்ராஜ், குழந்தைவேல், சிவக்குமார், பொருளாளர் பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, அழகேசன், தெய்வநாயகம், அச்சரம்பட்டு வினோத், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு தலைவர் வேலு, எஸ்.சி., எஸ்.டி., துணை அமைப்பாளர் திராவிடமணி, மாவட்ட கவுன்சிலர்கள் கவுதம், பிரேமா குப்புசாமி, வானூர் ஒன்றிய துணை சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, கவுன்சிலர்கள் மகாலட்சுமி ஏழுமலை, சித்ரா செல்வக்குமார், முனுசாமி, இளைஞரணி அமைப்பாளர் சங்கர், துணை அமைப்பார் ஜோதி பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாலட்சுமி தெய்வேந்திரன், சித்ரா வீரப்பன், முருவம்மாள் மனோகரன், சித்ரா சதாசிவம், பாரதிமுருகன், லட்சுமி துரைக்கண்ணு, சிவக்குமார், கிருஷ்ணராஜ், புருேஷாத்தம்மன், ராஜகுருபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.