மேலும் செய்திகள்
தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கும் விழா
09-Mar-2025
விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட முண்டியம்பாக்கம், வி.சாத்தனுார், ஒரத்துார் ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு, மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால் வரவேற்றார்.தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.மேலும், மார்ச் 1ல் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம், ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை மளிகை பொருட்களை வழங்கினார்.அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தொகுதி பொறுப்பாளர் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி, செல்வம், சாவித்திரி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
09-Mar-2025