உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் பிறந்த நாள் : இனிப்பு வழங்கல்

முதல்வர் பிறந்த நாள் : இனிப்பு வழங்கல்

செஞ்சி : கவரை கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் விஜயகுமார் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் வாசு, துணைச் செயலாளர்கள் செல்வமணி, மதியழகன், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஒன்றிய பொருளாளர் இக்பால், இளைஞரணி அமைப்பாளர் பழனி, ஊராட்சி தலைவர்கள் பச்சையப்பன், தனலட்சுமி, அன்பழகன், முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், இந்தி திணிப்பிற்கு எதிராக உறுதிமொழியேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை