உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரு தரப்பு மோதல்: 7 பேர் கைது

இரு தரப்பு மோதல்: 7 பேர் கைது

விழுப்புரம் : வளவனூரில் இரு தரப்பு மோதல் சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் அடுத்த வளவனூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் செந்தில்குமார், 42; இவர், கடந்த 24ம் தேதி வளவனூர்-சிறுவந்தாடு சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே நடந்து சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் மணிகண்டன், 19; என்பவர் தனது பைக்கில் வந்தார்.அப்போது மணிகண்டன் மற்றும் உறவினர்களான பழனி, மாரிமுத்து, விக்னேஷ் ஆகியோர் செந்தில்குமாரை தாக்கி, திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் பாலமுருகன், சிவா ஆகியோர் வந்து, மணிகண்டனை தாக்கியுள்ளனர்.இந்த மோதல் குறித்து, இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், மணிகண்டன், செந்தில்குமார் உள்ளிட்ட 7 பேர் மீதும், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்