மேலும் செய்திகள்
போக்சோ சட்டம் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு
28-Aug-2024
விழுப்புரம் : விழுப்புரத்தில் சைபர் கிரைம் குற்றங்கள், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றம், போதைப் பொருட்களால் ஏற்படும் குற்றங்கள் குறித்து சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிழ்ச்சிக்கு, ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., கார்த்திகேயன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீபிரியா, சேகர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரவிசங்கர், ராஜசேகர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், பெருகி வரும் இணையவழி குற்றங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து கவனமாக இருப்பதற்கான வழிமுறைகள், ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைதளங்களில் நடக்கும் குற்றங்கள், போலி ஆப்களில் வழங்கப்படும் கடன்கள் பற்றி, சைபர் கிரைம் போலீசார், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில், 1930 உதவி எண்ணும், cybercrime.gov.inகுறித்து விளக்கமளித்து துண்டு பிரசுசரங்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டது.
28-Aug-2024