உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.கொசப்பாளையம் கோவில் அம்மன் தேர் வெள்ளோட்டம்

தி.கொசப்பாளையம் கோவில் அம்மன் தேர் வெள்ளோட்டம்

விழுப்புரம், : தி.கொசப்பாளையம் கிராமத்தில், கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.காணை ஒன்றியம், தி.கொசப்பாளையம் கிராமத்தில் உள்ள கலச காமாட்சியம்மன் கோவிலில் புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளது.இதன் வெள்ளோட்டம் நடந்தது. அதனையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புன்னியாகவஜனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ சாந்து ருத்ர ஹோமம், மகா பூர்ணாஹூதி, மஹா தீபாரதனை நடந்தது.பகல் 12:00 மணிக்கு ஸ்ரீ கலச காமாட்சி அம்மன் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில், ஊர் முக்கியஸ்தர்கள், குலதெய்வ வழிபாடு பக்தர்கள், இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ