உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் 31ம் தேதி கல்விக் கடன் மேளா

விழுப்புரத்தில் 31ம் தேதி கல்விக் கடன் மேளா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திற்கான கல்விக்கடன் மேளா வரும் 31ம் தேதி நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் கீழ் 2024-25ம் கல்வியாண்டிற்கு, மாணவர்கள் உயர்கல்வி பயிலும் பொருட்டு, வங்கியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் கல்விக்கடன் மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திற்கான கல்விக்கடன் மேளா (வங்கியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்) வரும் 31ம் தேதி காலை 10:00 மணிக்கு, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற உள்ளது.இதனால், கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களுக்கு, கல்விக் கடன் மேளா தொடர்பாக தெரிவித்து, கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை