மின்சார வாரிய அலுவலகம் இடமாற்றம்
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் மின்சார வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.கண்டாச்சிபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கண்டாச்சிபுரம்- நல்லாப்பளையம் சாலையில் இயங்கி வந்தது. தற்போது இந்த அலுவலகம் 10ம் தேதி முதல் கண்டாச்சிபுரம் காந்தி சிலைக்கு பின்புறத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் இயங்கத்தொடங்கி உள்ளது.எனவே பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான அனைத்து மின்சேவைகளையும் புதிய அலுவலகத்திற்கு சென்று பயனடையுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் நாகரஜன் தெரிவித்துள்ளார்.