உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேட்பாளர்களின் முதல் கட்ட தேர்தல் செலவு கணக்கு தாக்கல்

வேட்பாளர்களின் முதல் கட்ட தேர்தல் செலவு கணக்கு தாக்கல்

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் வேட்பாளர்களின் முதல் கட்ட தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு, அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தலையொட்டி விழுப்புரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்வது குறித்து, வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமை தாங்கினார். தேர்தல் செலவின பார்வையாளர் ராகுல் சிங்கானியா முன்னிலை வகித்து, தேர்தல் செலவினங்களை விதிகள்படி அளிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினர்.கூட்டத்திற்கு பின், மாவட்ட தேர்தல் அலுவலர் கூறுகையில், 'கூட்டத்தில், தற்போது வரை வேட்பாளர்கள் செலவினம் செய்த அறிக்கையினை தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் சமர்ப்பித்தனர். வேட்பாளர்களின் செலவினங்கள் அனைத்தும், முழுமையாக நிழல் கணக்கீட்டு பதிவேட்டுடன் ஒப்பிட்டு கணக்கு சரிபார்க்கப்பட்டது.மேலும், வேட்பாளர்கள் வசம் உள்ள பதிவேட்டில், செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டதற்கான ஒப்புதல், தேர்தல் செலவின பார்வையாளரால் வழங்கப்பட்டது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ