நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், காகுப்பம், எருமனந்தாங்கல் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, எருமனந்தாங்கல் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அருகே உள்ள நுண்ணுர கிடங்கில் கொட்டி வைத்திருந்தனர்.இந்நிலையில், நேற்று மதியம் 1:00 மணியளவில், திடீரென எருமனந்தாங்கல் குப்பை கிடங்கில் மக்காத குப்பை (பிளாஸ்டிக் பொருட்கள்) தரம் பிரிக்கும் ஷெட்டில் திடீரென தீ பிடித்தது. இதனால், அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமானது.தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் 4 வாகனங்களில் வந்து, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.