உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச சைக்கிள் வழங்கும் விழா

இலவச சைக்கிள் வழங்கும் விழா

செஞ்சி: செஞ்சி அடுத்த கவரை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் பனிமலர் ராஜாராம், ஊராட்சி தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், 47 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், செஞ்சி தாசில்தார் ஏழுமலை, பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, முல்லை, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை