உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச சைக்கிள் வழங்கும் விழா

இலவச சைக்கிள் வழங்கும் விழா

கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஒன்றியம் சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, ஊராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலையைாசிரியர் ராமநாதன் வரவேற்றார்.விழாவிற்கு தலைமை தாங்கிய ஒன்றிய சேர்மன் வாசன், மாணவ, மாணவிகள் 175 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.கண்டமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கணேசன் வாழ்த்திப் பேசினாா். ஊராட்சி தலைவர்கள் மதியழகன், ஆதிநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.உதவி தலைமையாசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை