உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயானக் கொள்ளை உற்சவம் 

மயானக் கொள்ளை உற்சவம் 

விக்கிரவாண்டி,: விக்கிரவாண்டி பகுதி களில் அங்காளம்மன் கோவில் களில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.விக்கிரவாண்டி வீடூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி மகிஷா சூரனை வதம் செய்த சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலாவாக மயானம் சென்றடைந்தது.அங்கு பக்தர்கள் காய்கறி, சில்லறை, தானியங்களை இறைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.இதே போன்று, விக்கிரவாண்டி வக்ரகாளியம்மன், குறத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் நடந்தது. பக்தர்கள் காளி குறத்தி வேடமிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி