உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊர்க்காவல் படை வீரர்களுக்கு காவலர் கேன்டீன் அடையாள அட்டை

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு காவலர் கேன்டீன் அடையாள அட்டை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்களுக்கு, காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழக காவல்துறையின் சீருடை பணியாளர்கள் பயன்பெறும் வகையில், குறைந்த விலையில் அத்தியவசிய பொருள்கள் வழங்கும் காவலர் பல்பொருள் அங்காடி மாவட்டங்கள் தோறும் இயங்கி வருகிறது. இதில், போலீசார், காவல் துறை அலுவலர்கள் அனைவரும் பொருள்கள் வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஊர்க்காவல் படையினர் பொருள்கள் வாங்கி பயன்பெறலாம் என்று, தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினர் பயன்பெறும் வகையில், காவலர் பல்பொருள் அங்காடிக்கான அடையாள அட்டைகள் ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்டது.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி., தீபக் சிவாச் ஊர்க்காவல் படையினருக்கான அடையாள அட்டையை வழங்கினார். இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் 293 ஊர்க்காவல் படையினர், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !