மேலும் செய்திகள்
பைக் மோதி முதியவர் பலி
11-Sep-2024
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லுார் அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்தில் வாலிபர் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தயாளன் மகன் ராஜா, 40; இவர் நேற்று மாலை டி. புதுப்பாளையம் கிராமத்தில் இருந்து திருவெண்ணெய்நல்லுார் நோக்கி பைக்கில் வந்தார். திருவெண்ணெய்நல்லுார் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பைக் நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்த ராஜா அதே இடத்தில் இறந்தார்.தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மற்றோர் பைக்கல் வந்து.காயமடைந்த இருவரை முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
11-Sep-2024