உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உயர் மின்னழுத்தம் பிரிட்ஜ் வெடித்து சேதம்

உயர் மின்னழுத்தம் பிரிட்ஜ் வெடித்து சேதம்

மரக்காணம்: மரக்காணம் அடுத்த நல்லுாரில் உயர் மின்னழுத்தம் காரணமாக பிரிட்ஜ் வெடித்ததால் பரபரப்பு நிலவியது.மரக்காணம், முருக்கேரி பகுதியில் கடந்த 5 நாட்களாக அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வந்தது. மேலும், குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தமாக மாறி மாறி வந்ததால், பலரது வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமாயின.இந்நிலையில் நேற்று மரக்காணம் அருகே உள்ள நல்லுார் கிராமத்தைச் சேரந்த காளிதாஸ், 45; என்பவர் வீட்டில் இருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்து சிதறியது. இதனால் வீடு முழுவதும் புகை மூட்டமானது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.இது குறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை