மேலும் செய்திகள்
பேராசிரியை மனைவியை கொன்று நாடகம் ஆடிய கணவர் கைது
07-Feb-2025
உளுந்துார்பேட்டை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர் சலீம்பாஷா மகன் கலீம், 21; கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனா, 19; இருவரும் ஆறு மாதங்களாக காதலித்தனர். கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர்.புவனாவை காணவில்லை என, அவரது தாய் உமா அளித்த புகாரில், திருநாவலுார் போலீசார் இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினர். புவனா மேஜர் என்பதால் கலீமுடன் அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன் கலீம் வீட்டிற்கு சென்ற உமா, புவனாவிடம் பேசி, வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின், கணவர் வீட்டிற்கு அவரை அனுப்பவில்லை. இதனால் மனமுடைந்த கலீம், அப்பகுதியில் உள்ள 100 அடி உயர மொபைல்போன் டவரில் நேற்று முன்தினம் இரவு 11:10 மணியளவில் ஏறி, காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.உளுந்துார்பேட்டை போலீசார் சமரசம் செய்தும், கலீம் கீழே இறங்கவில்லை. தொடர்ந்து, டி.ஒரத்துாரில் இருந்த புவனாவை வரவழைத்ததை தொடர்ந்து, நள்ளிரவு அவர் கீழே இறங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
07-Feb-2025