மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: மத்திய அரசை கண்டித்து, விழுப்புரத்தில், இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன் முன்னிலை வகித்தனர். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சரவணன், பொருளாளர் இன்பஒளி, சகாபுதீன், நாராயணன், ஜெயச்சந்திரன், ஜெயமலர், இடைகமிட்டி செயலாளர்கள் பிராங்க்ளின், தனுசு, செல்வகுமார், பாலசுப்ரமணியன், நிதானம், மாரியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து பேசினர்.