உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சர்வதேச இளைஞர் தின விழா; விழுப்புரத்தில் மாரத்தான் ஓட்டம்

சர்வதேச இளைஞர் தின விழா; விழுப்புரத்தில் மாரத்தான் ஓட்டம்

விழுப்புரம், : சர்வதேச இளைஞர் தின விழாவையொட்டி, விழுப்புரத்தில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், மாரத்தான் ஓட்டத்தை, கலெக்டர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் நடைபெற்ற ஓட்டத்தில், நுாற்றுக்கணக்கான இளைஞர்கள், மாணவிகள் பங்கேற்றனர். இந்த ஓட்டம், பெருந்திட்ட வளாக மைதானத்தில் துவங்கி, நான்கு முனை சந்திப்பு, திருக்கோவிலுார் ரோடு, பெருந்திட்ட வளாகம் வழியாக சென்று நிறைவடைந்தது.இப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருங்கைகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.7 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். அடுத்தடுத்த முதல் 7 இடங்களைப் பிடித்தவர்களுக்கும், ஆறுதல் பரிசாக ரூ.ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரா அலுவலர் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்குமார், துணை இயக்குநர் ( காசநோய்) சுதாகர், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவ கண்காணிப்பாளர் தரணிவேந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, மருத்துவ அலுவலர்கள் ரவிராஜா, சுகந்தி, சிவரஞ்சனி, சரத், எயிட்ஸ கட்டுப்பாட்டு அலுவலக திட்ட மேலாளர் கவிதா திருமலை, மாவட்ட மேற்பார்வையாளர் பிரேமா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை