உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேர்தல் விழிப்புணர்வு நடை ஓட்டம் பங்கேற்க அழைப்பு

தேர்தல் விழிப்புணர்வு நடை ஓட்டம் பங்கேற்க அழைப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த மினி நடை ஓட்டம் நாளை 30ம் தேதி நடக்கிறது.மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி செய்திக்குறிப்பு:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேர்தல் துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் விழிப்புணர்வு குறித்த மினி நடை ஓட்டம் நாளை நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை 6:30 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் துவங்கி, சிக்னல் வரை சென்று மீண்டும் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதனால், இந்த விழிப்புணர்வு தொடர்பாக, மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ