உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கத்தியால் வெட்டியவர் கைது

கத்தியால் வெட்டியவர் கைது

விழுப்புரம்: வளவனுார் அருகே முன் விரோத தகராறில் 2 பேரை கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.கலிஞ்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன் மகன் ஜெகன், 33; விழுப்புரம் அடுத்த நன்னாட்டாம்பளையத்தைச் சேர்ந்தவர் மணி மகன் பச்சையப்பன், 23; இருவருக்குமிடையே சில நாட்களுக்கு முன்பு, மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.கடந்த 13ம் தேதி, கலிஞ்சிக்குப்பம் தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பச்சையப்பன் மற்றும் அவரது உறவினர் அஜித், 26; ஆகியோரை மறித்து தகராறு செய்த ஜெகன், இருவரையும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினார்.புகாரின் பேரில், ஜெகன் மீது வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை