மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழா
13-Aug-2024
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த செவலபுரை, சிறுவாடி கிராமத்தில் திரவுபதி அம்மன், போத்ராஜா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த 4ம் தேதி கணபதி யாகத்துடன் விழா துவங்கி அனைத்து பூஜைகளும் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, 108 மூலிகை யாகம், மகா தீபாரதனையைத் தொடர்ந்து 9:00 மணிக்கு கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திரளாக கிராம மக்கள் பங்கேற்றனர்.
13-Aug-2024