மேலும் செய்திகள்
போதை தலைமை ஆசிரியர் சி.இ.ஓ.,வுக்கு தலைவலி
28-Aug-2024
விழுப்புரம்:விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு, தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் கோபிநாத், சட்ட தன்னார்வ தொண்டு உறுப்பினர் கவிதா ஆகியோர் மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு கருத்துகளை தெரிவித்தனர்.முகாமில், பொதுமக்கள், தங்களின் வழக்குகளை நேரடியாக கோர்ட் முறையில் அல்லாமல் மாற்று முறையில் தீர்வு காணவும், மக்கள் நீதிமன்ற வழிமுறையில் சமரச தீர்வு, பெண்கள், குழந்தைகளின் உரிமைகள், அவர்களுக்கான சட்ட பாதுகாப்புகள், குடும்ப பிரச்னைகள் தீர்வதற்கு சட்ட வழிமுறைகள் குறித்தும் விளக்கினர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
28-Aug-2024