மேலும் செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மனுக்கு வளையல் அலங்காரம்
08-Aug-2024
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அறங்காவலர் குழுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை விழுப்புரம் உதவி ஆணையர் சந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலராக தேர்தலை நடத்தினார்.இதில் அறங்காவலர் குழு தலைவராக இரண்டாம் முறை பூசாரி மதியழகன் தேர்ந்தெடுக்கப் பட்டார். உதவி ஆணையர் ஜீவானந்தம், ஆய்வாளர் சங்கீதா, அறங்காவலர்கள் சுரேஷ், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோவில் பூசாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
08-Aug-2024