உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் ரத்த தானம் அமைச்சர் துவக்கி வைப்பு

விழுப்புரத்தில் ரத்த தானம் அமைச்சர் துவக்கி வைப்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த முகாமிற்கு மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து முதல்வர் பிறந்த நாள் உறுதிமொழியேற்றனர்.முகாமில், லட்சுமணன் எம்.எல்.ஏ., உட்பட 720 பேர் ரத்த தானம் வழங்கினர். அரசு மருத்துவக்கல்லுாரி ரத்த வங்கி குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, கணசேன், முருகவேல்.பேரூராட்சி செயலாளர் ஜீவா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், முன்னாள் ஒன்றிய சேர்மன்கள் சிவா, குப்புசாமி, மாவட்ட இளைஞரணி தினகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், சிறுபான்மை பிரிவு தாகீர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முத்துசாமி, மணி, நகராட்சி கவுன்சிலர்கள் மணவாளன், சாந்தராஜ், ஜனனி தங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !