மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
11 hour(s) ago
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
11 hour(s) ago
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
11 hour(s) ago
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
11 hour(s) ago
விழுப்புரம் : 'பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டுகிறார்' என பொன்முடி பேசினார்.விழுப்புரத்தில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை நேற்று மாலை அவர் பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி காலத்தில்தான் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் நடந்தது. பின்தங்கியிருந்த விழுப்புரத்திலும், தி.மு.க., ஆட்சியின்போது தான் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. புதிய பஸ் நிலையம், கலெக்டர் பெருந்திட்ட வளாகம், கோர்ட் வளாகம் என, தமிழகத்தில் எந்ந மாவட்டத்திலும் இல்லாத சிறப்பாக, அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது.மருத்துவ சேவைக்கு புதுச்சேரிக்குச் செல்லும் நிலை மாறி, விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி தொடங்கி சேவை நடந்து வருகிறது. 'இண்டியா' கூட்டணியை ஒழிக்க பிரதமர் மோடி தீவிரமாக செயல்படுகிறார். மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டுகிறார். இந்த தேர்தலில் 'இண்டியா' கூட்டணி வெற்றி மூலம் பா.ஜ.,வை விரட்டுவோம்.இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago