| ADDED : ஆக 08, 2024 12:19 AM
மயிலம் : மயிலம் பொறியியல் கல்லுாரி மாணவர் கோகோ விளையாட்டு போட்டியில் மண்டல அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.இது குறித்து மாணவர் தமிழ்வேந்தன் கூறுகையில் எங்கள் மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களின் விளையாட்டிற்கு தனி கவனம் செலுத்தி வருகின்றனர். கல்லுாரி மாணவ, மாணவியர்கள் விளையாடுவதற்கு ஏற்ற விசாலமான விளையாட்டு மைதானம் இங்கு உள்ளது.அதற்கு தேவையான தளவாடப் பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். விளையாட்டை ஊக்குவிக்க கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், விளையாட்டு போட்டிகளுக்கு வெளியூருக்கு செல்லும் மாணவர்களுக்கு முழு கவனம் செலுத்தி கல்லுாரி அளவில் நடக்கும் போட்டிகளுக்கும். மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடக்கும் போட்டிகளுக்கும் அழைத்துச் செல்லுகின்றனர்.இதனால் மயிலம் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் விளையாட்டில் சிறப்பிடம் பெற முடிகிறது. இவ்வாறு சிறப்பிடம் பெற்றால் கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு ஏதுவாகிறது. எனவே மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் விளையாட்டிற்கும் நேரத்தை ஒதுக்கி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.மேலும் எங்கள் மயிலம் கல்விக் குழும சேர்மன் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன் கல்லுாரி விளையாட்டு ஆசிரியர் பிரேம்குமார் ஆகியோர் மாணவர்களை ஊக்குவிப்பதால் விளையாட்டில் தனித்திறனை மயிலம் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் அடைய முடிகிறது என கூறினார்.