உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய சதுரங்க போட்டி: செஞ்சி வீரர் வெற்றி

தேசிய சதுரங்க போட்டி: செஞ்சி வீரர் வெற்றி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க வீரர், தேசிய அளவிலான போட்டியில், நான்காம் இடம் பிடித்தார்.செஞ்சியைச் சேர்ந்தவர் கண்ணன். பட்டப் படிப்பு மற்றும் ஆசிரியர் பட்டய படிப்பு முடித்துள்ளார். சதுரங்க விளையாட்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றார். கடந்த 2009ம் ஆண்டு, ராஜா தேசிங்கு சதுரங்க பயிற்சி நிலையத்தை துவக்கினார். 15 ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.இவர், விசாகப்பட்டினத்தில் நடந்த தேசிய அளவிலான சதுரங்க போட்டியில், நான்காம் இடம் பிடித்துள்ளார். இப்போட்டியில், 400 வீரர்கள் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற அவருக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !