உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

மயிலம்: மயிலம் அடுத்த பொன்னம்பூண்டி கிராமத்தில் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா நடந்தது.விழாவிற்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்புரையாற்றினார். திட்ட அலுவலர் சிவசுப்ரமணியன் திட்ட அறிக்கை வாசித்தார்.விழுப்புரம் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், திருவள்ளுவர் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி